எது நாகரீகம்

பசித்தபோது காட்டு மிருகத்தை கொண்டான்
அவனை காட்டுமிராண்டி என்றோம்
மனிதனை மனிதனே கொல்லுகிறான்
இவனை என்னவென்று சொல்லுவது ?

அவனிடம் ஆடை இருந்ததில்லை
அம்மணமாக திரிந்தான்
இங்கு எல்லாம் இருக்கிறது
ஏன் இப்படி வாழ்கிறார்கள்

ஆதிவாசி எல்லோரும் ஒன்றுபட்டே
வாழவேண்டும் என நினைத்தான் வாழ்ந்தான்
நவினவாசியோ நம் கண்ணெதிரே
தான்மட்டும் வாழவேண்டும் என நினைகிறான்

காட்டுவாசி கலாச்சாரம்
தெறியாதவன் என்றோம்
நட்டுவாசி எப்போது
கலாச்சாரத்தை காப்பாற்றினான்

அநாகரீக மனிதன் -அவன்
நாகரீகமாகத்தான் வாழ்ந்தான்
நாகரிக மனிதர்கள் நாம்
அநாகரீகமாக வாழ்கிறோம்

எழுதியவர் : அதிவீரன் . கா (7-Jan-14, 6:46 pm)
Tanglish : ethu naagareegam
பார்வை : 130

மேலே