புறமுதுகிட்டேன்

உள் ஒன்றிப் போய்
முள் வார்த்தைகள் வீசினேன்
புறத்தில்.
புறமுதுகிட்டேன் உனக்கு
தெரிந்து விடுமே என்று.
கண்டறிவாய் கண்களில்
என வாய்ப்புகள்
தவிர்த்து ,தவித்தேன் தனியே.
எதிரில் நிற்காமல்,
எதிர் காலத்தில்
உட்கார்ந்தேன் .குமைந்து!