காமுகரும் கழிசறை நாய்களும்

காம வேடர்களின் கட்டுக்கடங்கா ஆசை
கழிசறை நாய்களின் சாமி பூசை -இரண்டும்
காலத்தை ஏமாற்றி ஞாலத்தை கா மாற்றும்

வன்புணர்வு எனும் தீனிக்கு
மெய்யுணர்வு அற்றவனின்
காட்டேரிச் செயல்

ஈனமான உன் சிந்தனை
ஊனமான உன் வஞ்சனை
உதிர உண்ணியாக - ஏன்
குழந்தைகள் மேல் படர வேண்டும்?

இந்த சின்னஞ்சிறு பூக்கள்

புற்று நோயா தருகிறது?
புன்னகையை தானே பூக்கிறது!!
புரிந்து கொள்ளாத பூர்வீகமே!!
தாய் - பிள்ளைகள் என்றாவது
பிரித்தறிய மாட்டீர்களா?

(ஒரு தந்தை தனது 9 வயது மகளை வன்புணர்வுக்கு ஆளாக்கிய வேலை கசிந்த கண்ணீர் துளிகள் இவை ...)

எழுதியவர் : இமாம் (8-Jan-14, 5:42 pm)
பார்வை : 139

மேலே