மண்ணோடு மண்ணாகும் மழலைகள்

உண்மைதான்
உலகம்
உண்மையிலே
சுருங்கிவிட்டது...
கருவறையில் இருந்து
நேராக கல்லறையை
சென்றடைகின்றோம்...!

உண்மைதான்,
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
அதற்காக இப்படியா
உறுதிப்படுத்த வேண்டும்...?

மண்ணை அள்ளி
உண்ணுகின்ற
மழலைகளை....
மண்ணோடு
மண்ணாக்குக்கின்றன
சில மாமாதைகள்...!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (8-Jan-14, 4:23 pm)
பார்வை : 491

மேலே