எது கவி
ஏதேதோ எழுதுகிறேன்
எதை தான் கவி என்பீர் !!
வர்ணஜாலம் காட்டும் வார்த்தைகளா
இயல்பாக பேசும் வாழ்க்கையா
எதை தான் கவி என்பீர் !
கருத்துகள் நிறைந்தால் அது கவி
அழுத்தங்கள் தந்தாள் அது கவி
வருத்தங்கள் வந்தால் அது கவி
மாற்றங்கள் பிறந்தால் அது கவி -இதில்
எதை தான் கவி என்பீர் !
மயக்கத்தில் சொல்லும் வார்த்தைகளா,
மயக்கம் கொள்ளும் வரிகளா!!
இருப்பதாய் இல்லாததை புனையும்
கற்பனை காவியமா
எதை தான் கவி என்பீர் !
உவமைகள் இட்டால் அது கவியோ
இலக்கணம் சேர்த்தால் அது கவியோ
இல்லாதவனுக்கு கல்லாதது சொல்வது கவியோ
இதில் எதை கவி என்பீர்!
அன்று அரசபையில் பிழைப்பாக
புகழ்ந்து வாழ்ந்தனர் .
இன்றோ பிழை கூறியே
கவி வளர்த்தனர் !!
பாமரன் அறியாதது
பாரெல்லாம் புரியாதது
உனக்கு மட்டுமே சொந்தமானது
எதை தான் கவி என்பீர் !
மொழி வளர்க்கும் கவியே
விழி பிதுங்கி நிற்கும்
பழி சொற்களை வைத்து
வழி இன்றி கவிபாடும் புலவா
எதை தான் கவி என்பீர் !