பொங்கல்
தமிழ்ப் புது விடியலே நீ வருக
தமிழ் கலாச்சாரத்தை உணரச்செய்ய நீ வருக
தமிழ் நினைவின் உணர்வுகளே நீ வருக!
தமிழர்களின் செந்தமிழின் திருநாளே நீ வருக
தமிழர்கள் தை- தமிழ்ப்புத்தாண்டே நீ வருக
தமிழனுக்கு நன்மைகளைக் கொண்டு நீ வருக
தமிழ் பண்பாட்டின் பெருமைகளை கொண்டு நீ வருக
தமிழரின் வாழ்வு நிலைகளில் நிம்மதியாய் நீ வருக
தமிழனுக்கு எந்நாளும் அமைதி தருகின்ற ஆண்டாக நீ வருக
மார்கழிக்கு இளையவளே மனம் மகிழ நீ வருக.
உன் விடியலை பார்த்து வருகைக்காக காத்திருக்கின்றோம்
மகிழ்ச்சி பொங்கும் உன் வருகைக்காக காத்திருக்கின்றோம்
பல கனவுகளை சுமந்து உன் வருகைக்காக காத்திருக்கின்றோம்
நம்பிக்கையின் விழிப்போடு உன் வருகைக்காக காத்திருக்கின்றோம்
விடியவேளை நாமெழுந்து நீராடி உன் வருகைக்காக காத்திருக்கின்றோம்
உன் வரம் பெற்று உருவம் பெற உன் வருகைக்காக காத்திருக்கின்றோம்