என்றும் மாறாதது
அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
நறுமணமும் மாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உடன்பிறப்புகளும் உதவாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம் தணிக்கலாம்
பகற்கனவும் பலித்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
தருமமும் தவறி போகலாம்
சத்தியமும் சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர் விடலாம்
கூறிய வாளும் குத்தாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
என் உணர்வுகளும் உறைந்து போகலாம்
உடலும் மெலிந்து போகலாம்
நாடி நரம்பும் தளர்ந்து போகலாம்
உயிரும் உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே..