ஆசை

அருவிகொட்டும் ஓசையில்
ஆழ்ந்து உறங்க ஆசை ...............

குயில் பாடும் ஓசையோடு
சேர்ந்து பாட ஆசை ..................

தென்றலோடு போட்டி போட்டு
மனிதரை தீண்டி பார்க்க ஆசை ...........

வான் மழையைப் போல வேகமாய்
அன்பை பொழிய ஆசை ..............

பறவையைப் போல வானில்
பறந்து திரிய ஆசை .......................

கடலைப் போல பூமியில்
ஆழமாய் இருக்க ஆசை .................

உயரமான மலை மீது நின்று
ஓ...... வென்று கத்தி நிற்க ஆசை .......

தமிழ்த் தேனை இப் பிறவியில்
திகட்டாமல் மொண்டு குடிக்க ஆசை ..........

சிகரம் போல் கம்பீரமாய் மண்ணில்
உயர்ந்து நிமிர்ந்து நிற்க ஆசை .....................................

வண்ணத்துப் பூச்சியின் சிறகில்
ஒட்டி நிற்கும் ஓவியமாய்
ஓடிக் கொள்ள ஆசை ...........................

நதியைப் போல நாளும்
ஓடிக் கொண்டிருக்க ஆசை ...........

வானில் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டுத்
துணி வான வில்லைப் போல்
மனிதர் நெஞ்சில் ஒட்டிக் கொள்ள ஆசை .......

வண்ணத் தோகை மயில் இறகில் இருக்கும்
வண்ணம் போல மறுபடியும் பிறக்க ஆசை .....

இத்தனை ஆசை எனக்குள் இருந்தாலும்
முத்தாய்ப் பாக எழுத்து இணைய தளத்தில்
கவிதையாக பிறக்க ஒரு சின்ன ஆசை ........

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (9-Jan-14, 6:24 am)
Tanglish : aasai
பார்வை : 65

மேலே