என்னவென்று அழைப்பது
கானல் நீராகத் தெரியும் வாழ்க்கை
கலங்கிய நீராக மாரம் நாள்
வெகு அருகில் , மிக சீக்கிரத்தில்
என்று கண்டு கொண்ட நீஜந்தா
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு
கொந்தளிக்கும் மனதை அமைதிப் படுத்தி
தெளிவான இலக்கை நோக்கி விரையும் முன்னே
திரும்பிப் பார்க்கிறாள் தான் கடந்து வந்த பாதையை
சறுக்கல்கள் எத்தனை எத்தனை
காலை வாரி விட்டவர்கள் எத்தனை எத்தனை
மனதை நோகடித் தவர்கள் எத்தனை எத்தனை
நோக்கில் கொண்டால் கணக்கிலடங்கா
திசை திரு ம்பாமல் நெறியிலே கோட்பாட்டிலே
வாழ்ந்த நிஜந்தா இன்று இடையூறுகள் கு றுக் கிட்டும்
நிலை பிறழாமல் நீதிக்குட்பட்டு வாழ்கிறாள்
வாழ்க்கையைக் குலைத்த கயவர்களையும்
உரிமையைப் பறித்த பே ராசைக்கா ரர்களை யும்
கழு விலேற்றா மல் மன்னித்து வாழும்
நிஜந்தாவை நிஜமாகவே என்னவென்று அழைப்பது?