தொலையா நினைவுகள்

உன்னை எனக்கு அறிமுகம் செய்த
என் தொ(ல்)லைபேசியை தொலைத்து விட்டேன்
தொலைந்த என் தொலைபேசியை தேடிய போது
தொலையாத உன் நினைவுகள் மலர்தன
தொடர்ந்து வந்த நிழல் கூட சில நேரம்
அயர்ந்து போய் மறைந்து போனது
களைப்பின்றி கண நேரம் தொடர்ந்து வந்தது
கலையாத உன் நினைவுகள் மாத்திரமே
மறைந்திருந்த என் மனக் காதல் அறிந்து கொண்டேன் அன்று.