உழவின் விழா தைமகள் விழா
உழவின் பெருமை உணரும் நாள் .,
உழவன் அருமை அறியும் நாள் .,
வயலின் வரப்பை வணங்கும் நாள்.,
வளர்ந்த கதிர்கள் விளங்கும் நாள் .
மஞ்சள் கரும்பு மணக்கும் நாள் .,
மங்கலம் கூட்டி மகிழும் நாள்.,
மாட்டை மக்கள் மதிக்கும் நாள்.,
மண்டியிட்டு அதை நாம் துதிக்கும் நாள்.
துள்ளும் காளைகள் குதிக்கும் நாள்.,
துடிப்புடன் இளைஞர் அதை அடக்கும் நாள்.,
பொங்கல் பொங்கி சிரிக்கும் நாள்.,
பொன் விளையும் பூமியை வணங்கும் நாள்.
அன்புடன் படையல் படைத்திடும் நாள்.,
அனைவரும் இனிதாய் பகிர்ந்துண்ணும் நாள்.,
அது ஆனந்தப் பொங்கல் பண்டிகைத் திருநாள்.
பொங்குக பொங்கல் .
பொங்கலோ பொங்கல்.. ..