ப்ளீஸ் டெல் மீ
சிறகுகள் பறபதற்கு....
சிந்தை அது சிரிப்பதற்கு
கவலைகள் மறப்பதற்கு
கண்கள் ரசிப்பதற்கு - இந்த
உண்மை புரிவதற்கு
உலகமே கொஞ்சம் மயக்கு - உன்மீது கொண்ட
ஆசையால் என்னை மடக்கு...!
இன்னும் பிறவி வேண்டும் - இறைவா
இத்தமிழ் நாட்டில் எனக்கு அதனை வை...
உன்னோடு நான் பேசுவதாய் இங்கே
உயர்தனிச் செம்மொழி உண்டு....இதை
உணராத மாந்தர் பலரால் - நான் மட்டும்
உன்னோடு மவுனமாய் பேசியபடி இருப்பேன்...
ஆனால்....ஆண்டவா.....
அப்படி நாம் இருவரும் மவுனமாக பேசினால்
ஆனந்தத் தமிழ் எப்படி வளரும்...?
ப்ளீஸ் டெல் மீ....!