எனைக் காணவில்லை- இப்படிக்கு - சங்கத் தமிழ்

பல்லைத் துலக்க
பிரஸ்ஸும் உண்டு
சொல்லைத் துலக்க
தமிழும் உண்டு - என்றேன்

தூரிகை என்று
சொன்னால் என்ன
பிரஸ் என்று ஏன்
பிதற்றினாய் நீயும் - என்றது குழந்தை

சினிமாவுக்கு பாட்டெழுதி எழுதி
செந்தமிழ் நிறைய மறந்தேன் நானும் - என்றேன்

டபக்கு - கடக்கு - கொடக்கு
மொடக்கு - மடக்கு - வடக்கு - என்றது குழந்தை

ஏன் உளறுகிறாய் - என்றேன்

எனக்கும்
தமிழ் சினிமாவில் பாட்டெழுத ஆசை-என்றது குழந்தை......!

டபக்கு - கடக்கு - கொடக்கு
மொடக்கு - மடக்கு - வடக்கு

டபக்கு - கடக்கு - கொடக்கு
மொடக்கு - மடக்கு - வடக்கு

இடை இடையே அகர முதல எழுத்தெல்லாம்
என்பதை....

அ - அ - அ
க - க - க
ர-ர-ர

என்று திக்குவாய் மாதிரி
வுட்டு வுட்டு படிக்கணும் சரியா ?

அதுக்கு பிறகு மறுபடியும்

டபக்கு - கடக்கு - கொடக்கு
மொடக்கு - மடக்கு - வடக்கு

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Jan-14, 7:02 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 105

மேலே