தமிழ் ஈழம்

தமிழா வா...
சென்றுவிடலாம்...
உரிமைகள் விட உயிர்கள் முக்கியம்...
எஞ்சி இருக்கும் உயிர்கள் இறக்கும் முன் சென்று விடலாம்...

சிங்கங்கள் என்று சொல்லிகொண்டிருக்கும் நரிகள் ...
நம் பிணங்களை கூட விட்டு வைக்க போவதில்லை ...

வாழ்வாதாரம் ...அதை தேடி தானே இங்கே வந்தோம்
வாழ்வதற்காக வேறு எங்காவது போவோம்...

வந்தாரை வாழ வாய்க்கும் தமிழ்நாடு ...
ஆனால்...
அங்கே பிறந்தாரை பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரம் இல்லை...

பல வருடங்களாக கத்திகொண்டிருகிறோம் ...
நம் குரல் யாருக்கும் கேட்கவில்லை...
கேட்ட சிலரும் பொருட்படுத்துவதில்லை...
கழுத்து அறுபடும் முன் வா சென்று விடலாம்..

உரிமைகள் விட உயிர்கள் முக்கியம்...

எழுதியவர் : dharma .R (10-Jan-14, 8:23 pm)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : thamizh ealam
பார்வை : 1051

மேலே