உழவனின் மகன்
வண்ண கன்னியிவளின்
கைப்பிடித்தோ
தொட்டு நடந்தோ
சொல்கிறேன்
மெளன மொழியில்..
பொங்கலோ பொங்கல்..!
கன்னியின் கரங்களில்
தீயென்று கொடுத்தேன்
விறகுகளை நிமிடங்களில்
எரிய வைத்தாள்.
அழகிய பானையில்
பச்சரிசியும் பாலும்
அளவான கொதிநிலையில்..
சரியான நாழிகையில்..
சரியான சாய்வுகோணத்தில்..
கிழக்கு நோக்கி
பொங்கலை பொங்கினாள்.
விண்ணும் மண்ணும்
அதிர ஒலித்தது
அந்த அறையில்...
புதிய தொழில்நுட்பத்தில்..
கன்னியாம் எந்தன்
கணினி
சத்தமிட வைத்தாள்..!
பொங்கலோ பொங்கல்--!
பொங்கலோ பொங்கல்--!
பொங்கலோ பொங்கல்--!
இப்படிக்கு,
மென்பொருள் வரைகலையில்
பொங்கிய பொங்கலை
பொறுமையாக
பொம்மையாக
ரசித்தப்படியே
ருசிக்கமுடியாமல்
வெறுமை தீயில்
பொங்கிகொண்டே
நியூயார்க் நகரிலிருந்து
உழவனின் மகன்.
-------------------------------------------இரா.சந்தோஷ் குமார்