என்னவென்று புரியல
உதயனின் நேசம் இல்லாதபோது
உறைபனியாகும் நீரது உறுதி
இதயத்தில்உன் நேசம் இல்லாதபோது
உறைந்து போகுதேன் குருதி
புல்வழியில் பாயும் புனல்
பளபளவென மின்னும்-அவள்
கயல்விழியில் விடியும் தினம்
நாளெல்லாம் மின்னும்....
நீரில்லா செடியது
நிலம்வீழ்ந்து போவதுபோல்-உன்
நினைவுகள் நீங்கும்போது
நிலையிழந்து போகுதேன் மனம்
இதழில் கதையெழுதி
இளந்தேன் உறியுது
எங்கிருந்தோ வந்த
பட்டத்து பூச்சி...
இல்லாத கவியெழுதி
இளமையாய் வழியுது
எப்போதும் என்முன்-உன்
புகைப்பட காட்சி...