தரணியெங்கும் தைப்பொங்கல்
காலத்தின் தலைப்பிள்ளை
மொழிகளின் முன்னோடி
நிலத்தை பண்படுத்தியவன்
நீரினை முறைப்படுத்தியவன்
இயற்கையை இறைமையாக்கியவன்
தமிழை தாயாக்கியவன்
அனுபவக்கல்வியை குருகுலமாக்கியவன்
அன்றாட வாழ்வை நெறிப்படுத்தியவன்
மருத்துவ உலகிற்கு முன்னோடியானவன்
வானவியலை கரைத்துக்குடித்தவன்
குடவோலை முறையை கண்டறிந்தவன்
கடல்பயணத்தில் கரைகண்டவன்
அன்பிலே உயர்ந்தவன்
அறிவிலே சிறந்தவன்
பண்பாட்டை போற்றுபவன்
பாரதத்தின் அச்சாணி
உலகெங்கும் தடம்பதித்தவன்
உண்மையை உயிராக்கியவன்
உழைப்பின் மேன்மையை
உலகுணர்த்த விழாயெடுக்கின்றான்
பொங்கல் வைக்கப்போகின்றான்
தரணியெங்கும் தடல்புடலாய்..
தமிழின் பெருமையை
வாழ்வால் உணர்த்துவோம் வாருங்கள் ..
---priscilla
12 சனவரி 2014