தலைவா
தனக்கென வாழ்ந்தோர் மத்தியில்
தமிழுக்கென வாழ்ந்தவன்!
தமிழுக்கென வாழ்ந்தோர் சிலரில்
தலைசிறந்து வாழ்ந்தவன்!
தலைசிறந்து வாழ்ந்தோர்க் கெல்லாம்
தலைவனாய் வாழ்ந்தவன்!
தலைமையான செந் தமிழுக்கு
தலைமகனாய் வாழ்ந்தவன்!
தலைக்கணம் நிறை யுலகில்
தமிழைத் தலைநிமிர்த்திவிட்டு
தலைவணங்கி நிற்கிறான்....
தன்னுயிர்தந்து தமிழினைக்காத்த
தாயக வீரர்களுக்கு!