பிரபாகரன்
அறியாதப் பதரென்று
அன்னியர்கள் ஆண்டிருக்க
புரியாத மொழிகள் பேசி
புவியில் நமை அடக்கிநிற்க
வாழ்ந்ததெல்லாம் போதுமென
நின்னைத்தவன்!
நினைத்தல்லாது-அதிசயம்
நிகழ்த்திக்காட்டியவன்!
இயக்கத்தை ஆரம்பித்து
இடிகளை இறக்கிவைத்தான்
எதிரிகள் மேல்!
எம் நிலைமையே
என்றும் அடிமையே
பெருங்கொடுமையே
என்றெண்ணிக்கிடந்த
எங்கட நெஞ்சில்,
இனி வளமையே
நல் செழுமையே
வேணும் புலித்தலைமையே
என்றெண்ண வைத்தவன்!
சிம்மமென பிதற்றிக்கொண்ட
சிங்களருக்கு
சிம்மசொப்பணம் தாண்டி
சீறும் புலிசொப்பணம் காட்டியவன்!
வீரத்தின் விளைநிலம்
ஈழத்தமிழினம் என
புலிக்கொடி நாட்டியவன்!
நான்
வீழ்வதற்க்கில்லை வீழ்த்தவென
நிரூபித்துக்காட்டியவன் –நேர்மையின்
நிரூபணமானவன்!
நிகரில்லாதென் பிரபாகரன்!
நீ
வன்னியில் நடாத்தினதை
நிழல் ஆட்சியென்றது வரலாறு;
நிழல் ஆட்சியே நிகரில்லாதிருந்த்ததே
நிச ஆட்சி நிகழ்ந்திருந்தால்
உலகமே உன் பின்னால்...
என் செய்வது
விதியுடன் வீணரின் சதியும்
வேலை செய்தது!
முள்ளிவாய்க்காலில் முடிந்ததாய்
எள்ளிநகையாடும் எதிரிகளுக்கு
சொல்லொணாத் துயரொடு
தோல்வியும் தர
காலத்தின் கட்டளைக்குக்
காத்திருப்பவன்!
இருந்தால் வரவேற்று
இலக்கை வென்றெடுப்போம்!
இறந்திருந்தால்
வீரவணக்கம் வைத்து
வணங்கி நிற்போம்!
எப்படியோ
எக்கணமும் நினை
நினைத்திருக்கும்
நம் இனம்!

