வாழ்ந்து காட்டு
பண்டிககைளும் நல்ல நாளும்
வந்து போகும் அவ்வப்போதே
பொங்கலும் வந்தது தை பிறந்தவுடன்
உழவர்களையும் கதிரவனையும்
போற்ற வரும் திருநாளே.
மாதந்தோறும் விழாக்கள் பெருகும்
நம் தமிழ் திரு நாட்டிலே
அருளுக்கு குறைவில்லை
செலவுக்கும் குறைவில்லை
என்று அறிந்தேன் நாளடைவிலே.
நல்ல நாள் என்றால் புத்தாடை
விழா என்றால் விருந்து
திருமணம் என்றால் பரிசு
என்ற பகட்டுக்கு வழி வகுத்து
வாழும் தற்காலத் தமிழனே
சற்று ஆற அமர யோசி
ஆடையில் பணத்தைக் கொட்டி
விருந்தில் பணத்தை இறைத்து
திருமணத்தில் பரிசு மழை பொழி ந்து
எதைக் கண்டாய் என் நண்பனே?
கடன் பட்டாய் மீள முடியாமல்
நாளை வந்து விடும் என்றே நம்பி
நாளை என்னவோ வந்தது
பணம் ஏனோ வரவில்லை
அமிழ்ந்தாய் கடன் சுமையிலே !
சட்டென்று புரிந்து கொள்
சிக்கனம் கடைப் பிடித்து
செம்மையாக வாழக் கற்றுக் கொள்
இருக்கும் இடம் தெரியாமல்
கொடுக்கும் கை அறியாமல்
அருமையாக வாழ்ந்து காட்டு.