என் நாடு என் மக்கள் - 2

வழி பிறப்பதோ தைத்திங்களுங்க - அதை
வரவேற்பதோ தமிழ் பொங்கலுங்க
ஒழுங்குக்கு நம்மினப் பெண்ணுங்க
ஒசந்து வந்தா போற்றனும் ஆணுங்க

நூறு கோடி ஆயினும் என்ன
பேரு தேடி தந்தவன் தென்ன(ன்)
வாடி போடி என்று சொன்ன
வடக்கு வாசம் வேண்டாம் பெண்ணே

காடு கறையும் கட்டடமா – ஆளுக்கு
வீடு(கள்) பல கட்டனுமா? – உழைக்காம
வாடகை வாங்கித் தின்னனுமா!
வாழ்க்கை நோயால கன்னனுமா?

பனைமரத்த வெட்டுறாங்க – வந்த
பழையப் பாதயை வெறுக்குறாங்க
மேற்கத்து பானிய இரசிக்கிறாங்க
மேலோங்கிடு வமுன்னு நினைக்கிறாங்க

விழுந்து புரண்ட்டாலும் ஒட்டனுங்க
உழைச்சி பொழைச்சாலும் வரி கட்டனுங்க
ஏய்ச்சி பொழைப்பவன தலையில் தட்டனுங்க
ஏழைக்கும் பொழைக்க வழி காட்டனுங்க

தமிழி(ல்)ல படிக்க மக்க(ள்) தயங்குறாங்க
தரமில்ல பலனில்லன்னு மயங்குறாங்க
பேரெல்லாம் புதுசு புதுசா வைக்குறாங்க
வேரென்ன வெல்லமிட்டாய்க்கு மொய்க்கிறாங்க

மாட்டுவண்டிய மறந்துபுட்டோம்
மாற்றமுன்னு நாம இருந்துபுட்டோம்
விறகொடித்து கூழ்காசி குடிச்சோம்
மரத்தயெல்லாம் வெட்டி வீட்டுல அடைச்சோம்

மாடும் அழியுதுங்கோ!
மரமும் அழியுதுங்கோ!
வானத்துல ஓட்டையின்னு!
வான ஆராய்ச்சி சொல்லுதுங்கோ

முறுக்கு மீசை தமிழனுங்க - நாம
முறுக்கும் சீடையும் தின்னவுங்க
பிஸ்ஸா பர்கர் தேடிக்கிட்டு – இப்ப
பஸார் பக்கம் போறோமுங்க.

உடைச்சி குடிச்சா ஒரு ரூபா சோடா
பேத்து குடிப்பதால பத்து ஆச்சிதுங்க
வாயுவும் தண்ணியும் மூலமுங்க – அதுக்கு
வேணுமா வெளிநாட்டு மூலையிங்க.

இவன்,
ர.சங்கர்

எழுதியவர் : ர.சங்கர் (15-Jan-14, 12:05 am)
பார்வை : 199

மேலே