தமிழ் தேசம்

பாட்டன் பூட்டன் காலத்துல‌
பண்போடு இருந்த‌ நேரத்துல‌
பொழப்பு தேடி வந்தாங்க‌
அண்டிப் பிழைக்க‌ வந்தவங்க‌
அடிமையாக்கி விட்டாங்க‌.....

படை எடுத்து வந்தவங்க‌
வித்துப் பொழைக்க‌ வந்தவங்க‌
கொட்டிக் கிடக்கும் செல்வம் கண்டு கொள்ளை அடிச்சுப் போனாங்க‌....

நாட்டை பிடிச்ச‌ அன்னியன் தான் நம்மை ஆட்டிப் படைக்க‌ பாத்தாங்க‌ அவன் ஆங்கில‌ மருத்துவம் பரப்பியதால்
நம் அத்தனை மருத்துவம் மறந்துவிட்டோம்....

சித்த‌ ஆயுர் வைத்தியரை அவன்
அழித்துக் கொன்று விட்டதினால் நாம் ஆங்கிலேயே டாக்டர்களின் காலில் விழுந்து கிடக்கின்றோம்....

பழந்தமிழ் உணவு மறந்து
நோய்பிடித்து சாகிறோம்
அத்தோட‌ அவனும் நிக்கலியே
அவன் சொந்த‌ மதத்தை பறப்பிவிட‌ நாம் நம் பாரம்பரியம் மறந்துவிட்டோம்
நம்மை படைத்த‌ வனையும் மறந்துவிட்டோம்..

தாய்தமிழை ஈனபாசை என்றான்
தமிழ்த்தாய் கண்ணீர் விடுகிறாள் ,ஆங்கிலம் வளர்த்தான் அவன் ஆதிக்கம் விதைத்தான் எத்தனையோ நாட்டையெல்லாம் அவன்
அடிமைபடுத்தி, இரத்தக் குழியல் குளித்துவிட்டு அன்பு என்று வேடமிட்டான்...

அவன் அரசியல் மதத்தை நம்மேல் திணித்துவிட்டான்...
கருப்பை திட்டிய‌ வெள்ளையனோ நம் கருப்பன் காந்தியின் முன்னே தோற்றான்...

விடுதலை பெற்றும் நாம்
ஆங்கிலமொழிக்கும் அவன் அரைகுறை நாகரீகத்திற்கும் இன்னும் அடிமையாக‌ இருப்பதுவோ?

நாம் அன்னிய‌ துணியை எறித்தது போல் அன்னிய‌ மொழி மோகம் மறந்து அன்னை தமிழை வளர்த்திடுவோம்....!

எழுதியவர் : Akramshaaa (15-Jan-14, 8:40 am)
பார்வை : 102

மேலே