சங்கீத பேய்

டயர்களில் சங்கமிக்கும்
சங்கீத பேயொன்று
காதருகே கானமழையொன்று
பொலிந்ததே..

இசையில் நனைய
உதிரத்தில் தானும் நனைந்ததே
கபடநாடகம் நடாத்தி
காரியத்தில் தானும் வென்றதே..

ஆஸ்பத்திரியில்
நானும் அவதியுற
ஆத்மத்திருப்தியில்
தானும் பறந்ததே..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 1:08 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 124

மேலே