நானொன்றும் கோழையல்ல

பேயென்று சொன்னாலும்
பரவாயில்லை
பிசாசென்று சொன்னாலும்
பரவாயில்லை
எதுவாயிருந்தாலும்
நானொன்றும் கோழையல்ல..
வாழ்வாதாரத்திற்காக
ஓடும் நீ
வாழ்விடத்தை
மறந்துவிட்டு
என்னை தூசிக்கிறாயே
நானொன்றும் கோழையல்ல..
ஓடியோடி உழைத்தாலும்
ஒழுக்கம் இல்லாவிட்டால்
நீயொரு தண்டம் தான்
சுத்தத்திலக்கரையில்லாது
அசுத்தத்தைத்தேடும் நீ
முயற்சி செய்யாதவரை
நானொன்றும் கோழையல்ல..