ஶ்ரீ கணநாதன்

ஓங்காரமான வேத முதல்வனாம் கண நாதனுக்கு நமஸ்காரம்!

ஏழை எளியர் முதல் அனைத்துத் தரப்பினரையும் கண்கவரும் அருள் தெய்வம் கண நாதனே!

மஞ்சள் பொடியிலும், களி மண்ணிலும், சாணியிலும் என அனைத்துத் தரப்பினரும் வழிபட நினைத்தால், உடனே அவருக்கு வடிவம் கொடுத்து, தனது பூசையை, எளிதில் கிடைக்கக் கூடிய அருக்கம்புல், எருக்கம்பூ, வன்னி இலை கொண்டு, ஓம் கணேசாய நம் என்றும், ஓம் கண நாதனே நம் என்றும், ஓம் விக்னேஸ்வராய நம் என்றும் கூறி, மனமுருகி தனது சங்கடத்தினையும், தனது காரியம் தங்கு தடையின்றி, நடந்தேறிட வழிபட்டு, பரிபூரணமான அருளும் கடாட்சமும் பெற்று நல் வாழ்வு வாழ அருளும் உன்னதமான, தெய்வம்.

மனிதக் கால்களும், விலங்கின் முகமும், இடைக்கு மேல் அதாவது கழுத்து, தோள் பகுதிகள் தேவ வடிவமும், பூத வடிவ வயிறும் கொண்டு நான்கு வகை கணங்களுக்கும் அதிபதியாகிறார்.

தங்கு தடையின்றி எழுத தனது கொம்பையே எழுத்தாணியாக்கி, இறைத்தொண்டிற்கு எழுத்துப் பணியை கடமையாய் கொள் என்று உணர்த்திய முமு முதல் தெய்வம் கண நாதனே!

ஒரு கொம்பு, இரு செவிகள், முக்கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறெழுக்கள் கொண்டவர் கண நாதன்.

அகங்காரம், ஆணவம் கொண்டவர்கள், ஒன்றும் செய்ய இயலாத் தன்மை கொண்ட மூஞ்சூறாக இருந்தாலும், சமயத்தில் விசுவரூபம் எடுத்து, தனது அகங்காரத்தினாலும், ஆணவத்தினாலும் அழிவை ஏற்படுத்திட முனையும் போது, அதனை அடக்கும் வல்லமை கண நாதனுக்கே உண்டு. தனது காலடியில் சேவை செய்து, பிறந்ததின் பலன் கிடைக்கச் செய்வதில் இருந்து
கண நாதனின் அருள் தன்மையை உணரலாம்!

சித்தர்களில் முதல்வராம் அகத்திய பெருமானிற்கே தண்ணி காட்டியவர்.

தனது நாளில், களி மண்ணிலே பிரதிஷ்டை செய்து வழிபட்டாலும், இறுதியில் தன்னை தன் அன்னையான கங்கையிடம் சேர்ப்பிக்கச் செய்து, அன்னையின் அருளுக்கும் பாத்திரமாகும்படி உணர்த்தியவர். மனமானது எப்பொழுது மாறும் என்பதனை உணர இயலாது. என்றும் அன்னையின் அருளில் திளைத்திருப்போருக்கு அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே குணக்குன்றாய் திகழ இயலும். இல்லையென்றால் காட்டாற்றுச் சுழலில் அகப்பட்ட பொருளாய் வாழ்க்கை மாறிவிடும்.

சங்கடம் நீங்கிய வாழ்வும், தெளிவான வாழ்வும் அமைய வேண்டும் என விரும்புவோர் - ஆடியிலே அன்னையை மனம் குளிரச் செய்திட்டனர்.
கண நாதனின் நாளில் சங்கடம் நீங்கிய வாழ்விற்கு அடித்தளம் இட்டனர் என்பதனை சொல்லாமல் சொல்லிய நாளாகும் சதுர்த்தி .

கண நாதனின் அருள் பெருவோம். சங்கடம் இன்றி ஆணவம் அகங்காரம் இன்றி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதனை நினைவினில் நிறுத்தி, ஏழை எளியோருக்கு, கல்வி, உடை, அன்னதானம், சமயமறிந்து உதவுதல் ஆகிய செயல்கள் செய்து, இறை அருள் பெறுவோம்!

பிறவிப் பயன் பெற உளமாற வழிபடுவோம்!

ஓம் கண நாதனே சரணம்! சரணம்!

எழுதியவர் : முரளிதரன் (16-Jan-14, 6:48 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 144

மேலே