காதலென்னும் சோலையினில்40
கவிதாவின் சித்தப்பாவும், அப்பாவும் இவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றனர்...........
ஊருக்குள் செல்ல செல்ல அனைவருமே அந்த சுற்றுபுறத்தின் எழில்மிகு காட்சியை ரசித்து சென்றனர், அவ்வளவு அழகு! அப்போது கவிதாவிடம் அண்ணி உங்கள் இடம் மிகவும் அழகாக இருக்கிறது! எப்படி அண்ணி இந்த ஊரை விட்டு வர உங்களுக்கு மனசு வந்திச்சி, நானாக இருந்தால் இப்படி பட்ட பிரம்மாண்டமான இடத்தை விட்டு வந்திருக்கவே மாட்டேன் என்று சொல்லி பூரித்தாள்................
திருமணம் ஆகிவிட்டால் கணவர் இடத்திற்கு செல்வதுதானே வழக்கம், என்று சொல்லி ராஜாவைப்பார்த்தாள்.......
அவனும் சிரித்து விட்டு,,,,,, சரி ராஜலெக்ஷ்மி உனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது என்றால் உனக்கு இங்கேயே மாப்பிள்ளை பார்த்து விடுவோமா? என்று கேட்டான்..............
கல்யாணமா?எனக்கா? ஐயோ வேண்டாம் நான் கடைசி வரைக்கும் உங்கள் கூடவே சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லி சிரித்தாள்.
கவிதாவின் வீடு வந்தது அம்மாவை ஓடிபோய் கட்டிக்கொண்டாள்
கவிதா.இருவரும் கண்ணீருடன் அன்பை பரிமாறிக்கொண்டார்கள் .........
வந்தவர்களையும் உபசரித்துவிட்டு, குட்டிராஜாவை கொஞ்ச ஆரம்பித்தார்கள் கவிதாவின் பெற்றோர்.
ராஜாவின் அம்மாவுக்கும் கவிதாவின் வீட்டையும் அவளின் பெற்றோரையும் ரொம்பவே பிடித்துப்போனது, "வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் என்னம்மோ என் பையன் என் குடும்பத்துக்கு சரி இல்லாத எவளையோ என்கூட்டிட்டு வந்து வட்டான்" என்று முதலில் நினைத்தேன்...........ஆனால் கவிதாவை பார்த்து பழகிய பிறகுதான் அவளின் நல்ல குணமும் மரியாதையும் புரிந்தது,,,,,,,
இப்பொழுது உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் உங்கள் குடும்பத்தைப்பற்றியும் உங்களை பற்றியும் புரிந்துகொண்டோம் என்று சொல்லி செல்லமாக கவிதாவின் தலையை தடவினாள்..........
சரி சம்மந்தி வந்த விஷயத்தை பற்றி சொல்கிறோம், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்துவிட்டார்கள், அதற்காக அப்படியே நாம் விட்டு விடமுடியுமா? அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்லி மகனை பார்த்துவிட்டு............
ஒரு நல்ல முகூர்த்தநாளா பார்த்து முறைப்படி திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டாள்.................
கவிதாவின் அப்பாவும் அம்மாவும் சந்தோஷத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடையில் சம்மதத்தை தெரிவித்து விட்டு சரி என்று புன்னகையுடன் சொல்கிறார்கள் .............
இன்னும் இரண்டு தினங்களில் இங்கிருந்து நாம் அனைவரும் கிளம்பி எங்கள் ஊருக்கு சென்று அங்குள்ள பெரிய திருக்கோயிலில் திருமண ஏற்பாடுகளை செய்துவிடலாம் என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது,,,,,,,,,,,,,
கவிதா அப்பா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் கொஞ்சம் உள்ளே வாங்க?????? என்று அழைக்க அனைவரும் திடுகிட்டு அவளை பார்க்கின்றனர்.........கவி என்ன சொல்லபோகிறாளோ????? ராஜாவும் மௌனமானான்..............
தொடரும்..........