விடுகதைகள்-41-60

41) எல்லாருக்கும் கிடைக்காத மதி ஆனால் எல்லாரும் விரும்புவது மதி. அது என்ன?

42) எரியும் ஆனால் குளிரும் அது என்ன?

43) ஊருக்கெல்லாம் ஒரு துப்பட்டி அது என்ன?

44) உயர்ந்த வீட்டில் இருக்கும், ஊரார் தாகம் தீர்க்கும் அது என்ன?

45) கவிழ்ந்து பூப்பூத்து, நிமிர்ந்து காய் காய்கும். அது என்ன?

46) அகன்ற வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன். அவன் யார்?

47) ஆளில்லாத இடத்தில் அங்கம்மாள் குடை பிடிக்கிறாள். அவள் யார்?

48) உரித்த கோழி, ஊரெல்லாம் சுற்றி வருகிறது. அது என்ன?

49) கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போகுது அது என்ன?

50) வெள்ளைப் பெட்டிக்குள் மஞ்சள் தங்கம். அது என்ன?

51) விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது அது என்ன?

52) காட்டில் கிடைத்த கட்டை, கான மழை பொழிகிறது அது என்ன?

53) வெள்ளைத் திடல்; கறுப்பு விதை அது என்ன?

54) பச்சைச் செடியில் தயிர்ச் சாதம். அது என்ன?

55) நாலு காலுண்டு, வீச வால் உண்டு. அது என்ன?

56)என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். அது என்ன?

57) எங்கள் வீட்டுத் தோட்டத்திலே மஞ்சல் யானை நிற்கும். அது என்ன?

58) குழியிலே மலரும் குச்சியிலே தொடுக்கும், கும்பி போகும். அது என்ன?

59) இரவெல்லாம் பூங்காடு, பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?

60)உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறாள். அவள் யார்?

எழுதியவர் : கணேஷ் கா (17-Jan-14, 3:40 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 562

மேலே