விடுகதைகள்-21-40
21) அவன் நிறம் நீலம், அவன் எல்லை நெடுந்தூரம், அது எது?
22) ஆடி, ஆடி நடப்பான். அரங்கதிர நடப்பான் அவன் யார்?
23) ஆவணி பிறப்பது எதனால்? நாடகம் முடிவது எதனால்?
24) ஆண்டுதோறும் வரும் வரி. அடுத்தடுத்து வரும் வரி அது என்ன?
25) உயிரோடு இருந்தால் சிவப்பு இறந்ததும் கறுப்பு அது என்ன?
26) ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?
27) வேலியைச் சுற்றி நீலிப் பாம்பு அது என்ன?
28) வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே அது என்ன?
29) வெட்ட வெட்ட முளைக்குது தைலமெல்லாம் கேட்குது அது என்ன?
30) முப்பத்திரண்டு காவலாளி நடுவில் ஒரு சின்னப்பெண் அது யார்?
31) மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர் அது என்ன?
32) போன ரயில் திரும்ப வராது அது என்ன?
33) மறப்புடன் வந்தது; இறப்புடன் நிற்கும் அது என்ன?
34) பரந்த காட்டேரிக்குப் பக்கமெல்லாம் சடை அது என்ன?
35) பகலில் தங்கத்தட்டு, இரவில் வெள்ளித்தட்டு அவை என்ன?
36) நேற்று பிறந்தவன், இன்று கட்டுகிறான் அது என்ன?
37) நாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார்?
38) நெட்டி இல்லாத வட்ட இலை அது என்ன?
39) ஒரு எழுத்து எழுத உதவும் அது என்ன?
40) ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டுக்கை. அது என்ன?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
