வீரம் எங்கே போனது
அச்சம் தவிர்
என்றான்
பா ர தி
முறுக்கு மீசை
மூலக் கவி .
எனக்கும் ஆசை தான்
ஆனால்
கண் முன்னே நடக்கும்
அரசியல் அவலங்களையும்
சமுதாயக் கேடுகளையும்
தனிமனிதச் சீரழிவுகளையும்
கண்டு
மனம் வெந்து
பொங்கி வருகிற
ஆத்திரத்தையும் ஆவேசத்தையும்
அடக்கி முடக்கி
அடி மனதில் புதைக்கின்றேனே
பாரதி கண்ட
வீரம் எங்கே ?

