காதல் ஓட்டம்
காதல் என்பது
கத்திரிக் காயா ?
கடையில் பொருக்கிக்
கூடையில் போட .
காதல் என்பது
கூட்டாஞ்சோறா ?
கண்டதும் கலந்து
உண்டு முடிக்க.
காதல் என்பது
விற்கும் பொருளா ?
காசை இரைத்து
வாரிக் கொள்ள.
கண்ணும் காதும்
மூக்கும் முகமும்
இதழும் இடுப்பும்
இயற்கையிலேயே
இம்சை பண்ணும்
இச்சை கொஞ்ஜம்
எச்சுப் பண்ணும்
அது தான்
காதல் என்று
விழுந்தால்
எழுவது எப்போ
எண்ணிப் பாரு
இரு மனம் ஒத்து
இணைந்து வாழ்வது
இயலுமென்றால்
கரத்தைப் பிடி
இல்லை என்றால்
கண்களை மூடி
ஓட்டம் பிடி .