அம்மாவின் அன்பு
பந்தயத்து குதிரை போல்
பந்து விளையாடும்போது
கால் இடறி கீழே விழுந்தேன்!
அம்மா...! அலறினேன்!
காற்றலைகள் அம்மாவின்
காதுகளில் போட்டன என் அலறலை!
இந்தளவும், எந்தளவும்
இம்மியளவும் என் பிள்ளைக்கு
துன்பம் வரக்கூடாதென்று
ஓடோடி வந்தாள் அம்மா!
என் அன்பு அம்மா!
இந்தளவும், எந்தளவும்
இம்மியளவும் என் பிள்ளைக்கு
துன்பம் வரக்கூடாதென்று
கூடவே ஓடி வந்தாள் அம்மாவின் அம்மா!