அவள்

அழகுடன் அவள் வாழ்ந்திருந்தாள்
அழகோ அழிந்திட வேண்டும்
ஒரு நாள் முதுமையை தழுவிட வேண்டும்
இடையே இதழில் புன்னகை ஏந்தி
இதயத்தை மகிழ்வில் நல்கியவள்
உணர்வுகள் நொறிங்கி உள்ளம் உடைந்தாள்
விழியில் கண்ணீருடன் நடந்தாள்
விழியில் கண்ணீருடன் வாழ்ந்தாள்
இன்று கலையாத துயிலில் அமைதியில் உறங்குகிறாள்

நாளை வெண்பளிங்கு சிலையாகலாம்
கலையின் அழகிய வடிவாகலாம்
புகழுரையில் கவிதை வரியாகலாம்
மாலை மரியாதையின் உரு ஆகலாம்
சிதறிய கண்ணீர் துளிகளை துடைத்திடும்
சமூகக் கரத்தினை அவள் எங்கு தேடுவாள்
சிலையும் கண்ணீர் சிந்தியே நிற்கும்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Jan-14, 9:32 am)
Tanglish : aval
பார்வை : 156

மேலே