நம்மை தவிர

கீழ்வானம் சிவக்க
கண்டதுண்டா ?
கடலோர சிப்பியை
எடுத்ததுண்டா ?

கருங்காகம் ஒன்று பார்த்து
கவலை பட்டதுண்டா ?
இரண்டு பார்த்து
இதழ் விரிந்ததுண்டா ?

தெரு ஒர குழந்தையின்
மிருண்ட விழியில்
மயங்கியது உண்டா?

கிழிந்த துணியில்
உன் மனம் கசங்கியது உண்டா?
சிட்டுக்குருவியின்
காலை குளியல் -உன்னை
கவர்ததுண்டா ?

மீன் கடித்து
மீனின் வலியை
உன்னர்ந்ததுண்டா ?

நீ வளர்த்த செடியுடன்
சில நிமிடம்
பேசியதுண்டா?
அதன் வாழ்வுக்காக
போராடியதுண்டா?

புரிந்துகொள்
நம்மையும் தவிர பல
நம் நட்புக்காக ......

- மா லட்சுமி பாலா

எழுதியவர் : மா லட்சுமி பாலா (19-Jan-14, 11:43 am)
Tanglish : nammai thavira
பார்வை : 65

மேலே