கள்ளிப் பாலை ஏன் தந்தார்…

மலரும் கொடியும் பெண்ணென்பார்…
மதியும் நதியும் பெண்ணென்பார்
மழலை மட்டும் பெண்ணென்றால்-அதை
மங்கையரே ஏன்கொல்கின்றார் (மலரும்)
நாடும் இறையும் பெண்ணென்பார்-தன்
நாடும் மொழியும் பெண்ணென்பார்
குழந்தை மட்டும் பெண்ணென்றால்-அதை
கூடா தென்றேன் அழிக்கின்றார் (மலரும்)
ஏங்கி அழுத குழந்தைக்கு
இறைவி வந்து பால் தந்தாள்
தாங்கி பெற்ற குழ்ந்தைக்கு
கள்ளிப் பாலை ஏன் தந்தார்…?(மலரும்)

சு.அய்யப்பன்

எழுதியவர் : (19-Jan-14, 11:54 am)
பார்வை : 70

மேலே