இப்படிக்கு அனாதைகள்
அன்பே அரவனைப்பாயா!!
இயற்க்கை அன்னை
பேணி காத்த என்னை...!
இதயமற்ற மனிதனின்
குடிவெறிக்கு குழந்தையானேன்!
அன்னையை அறிவேன் ஆனாலும்
அவளும் அவமானம் கருதி...
தூக்கி எறிந்தால் இயற்கை தொட்டிலில்
கழிவுகள் கழிவுகளுடன் கலந்தே
வளர்ந்தேன் ...!
அன்னை மீது குறை இல்லை
காமத்தால் கற்பை சூரையாடினால்
அவள் என்செய்வாள்....!
என்னை உருவாக்க வேண்டும் என்பது விதி !
தவிப்பால் இழந்தால் மதி !!
சமூகம் வாழ்ந்தால் வாழ்த்தும்
வீழ்ந்தால் தூற்றும்
வேறென்ன தெரியும்...
கை கொடுக்காது எனக்கு
கை கொட்டி சிரிக்கும் எனை பார்த்து
எல்லாம் அவரவர் வீட்டில் நடக்காதவரை...!!
என்ன வேண்டுமானாலும் நினைத்து போ
இயற்க்கை அன்னை என்னை வெறுப்பதில்லை
உங்களுக்கு நன்றி நீங்கள் வெறுப்பதினால்
தான் உந்துதல் பெற்று
சாதிக்க துடிக்கிறோம் வெற்றியும் பெறுகிறோம் மாறாதிரு நாங்கள் சாதிக்க வேண்டும் அதனால் ....