வாழத் தவிக்கும் இவன்

புறக்கணிக்கப் பட்ட பகுதியில்
புரண்டு கிடக்கிறான்
தாய் தந்தை இழந்து !
வாழ்வை இழந்த பிச்சைக் காரன் !
உருளும் இவ்வுலகில்
மருளும் ஒரு நொடி இவன்
மாண்டு போகும் இவ் உலகை
ஒரு நிமிடம் மீட்டுப் பார்க்காதவன்
நாம் குதூகலமாய் கொண்டாடும்
ஒரு தேதியிலே தான் இவனும் அவதரித்தான் .

நாம் கொண்டாடுகிறோம் இவன்
வாழ்வுக்காய் மண்டாடுகிறான்
எம்மிடம் கொச்சைப் பட்டு
மிச்சப் பட்ட அந்த உணவை
பெற்றுக் கொள்ள
கூச்சப் பட்டு பெற்றுக் கொண்டு
ஏச்சுப் பட்டு தின்னும் பிச்சைக் காரன்

சமூக ஒதுக்கலின் பெயர் தான்
அவன் பிச்சைக் காரன்
சமூக மறை நிலையில் அவன்
பிடித்திருக்கும் இடம் வசதிகாரன்
தீமை அறியா அப்பாவி
கெடுதல் செய்யா காவலன்
இடைஞ்சல் இல்லா அறிஞன்
இலைமறை பாடகன்
இசை இளவரசன் .....

பிச்சைக் காரன்
ஒதுக்கப் பட்டவனல்ல
ஒதுக்குபவன் தான் பிச்சைக் காரன்
வசதி காரர் நாம் அல்ல
அவனுக்கும் சொந்தமான
பொருட்களைத் தான்
நாம் களவாடி இருக்கிறோம்
கள்வனை விட இவனே கொஞ்சம் மேல் .

ஒதுக்காமலும் பதுக்காமலும்
பாரினில் இவனுக்கோர் வீடமைத்து
சமூக விழுக்காட்டை வீழ்த்தி
காரினுள் நாம் சென்றாலும்
ஒரு கரையில் சந்தோசமாய்
இரசிக்கும் இரசிகனாய்
வாழ வழி சமைத்தால்
மனித குளம் உயர் சாதியாய்
திகழும் இவ்வுலகில்

எழுதியவர் : இமாம் (19-Jan-14, 9:17 am)
பார்வை : 371

மேலே