வேறுபடும் சிரிப்பு
அவர்களிலிருந்து
வேறுபட்டிருப்பதாய்
அவர்கள் எல்லோரும்
என்னைப் பார்த்து
சிரித்துக்கொண்டிருந்தார்கள்...
நான்
அவர்களைப் பார்த்து
சிரித்துக்கொண்டிருந்தேன்
மட்டம்தட்டும் குணத்தில்
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி இருப்பதால் ...!!