கேளாயோ தோழி
கங்கையின் பிரவாகமாய்
மங்கையெனுள் ஊற்றெடுத்த
சங்கத்தமிழ் சொல்லெடுத்துப்
பொங்கிவரும் கற்பனையால்
தங்கமென வார்த்தெடுத்துப்
பங்கமின்றி கவிவடித்து
இங்கிதமாய் இசையமைத்து
சங்கதிகள் அதில்கூட்டி
மங்கியதோர் நிலவொளியில்
வங்கக்கரை மணல்வெளியில்
திங்களும் வாழ்த்துரைக்க
சிங்காரமாய் பாடுகையில்
பொங்குகடல் அருகில்வந்து
சங்கீதம் ரசித்தவழகை
வங்கணத்தி என்சொல்வேன் ......???
(வங்கணத்தி - உற்ற தோழி )