+நேரமில்லை+
சீரியல் பார்க்க நேரமுண்டு
சிற்றுண்டி உண்ண நேரமுண்டு
சிறு அரட்டைக்கு நேரமுண்டு
சாதனை படைக்க நேரமில்லை
கிரிக்கெட்டு பார்க்க நேரமுண்டு
போட்டுக் கொடுக்க நேரமுண்டு
தலைவனை புகழ நேரமுண்டு
ஏழைக்கு உதவ நேரமில்லை
அரசியல் கதைக்க நேரமுண்டு
ஆங்கில படத்துக்கு நேரமுண்டு
வலைதளம் உலவ நேரமுண்டு
நன்மைகள் செய்திட நேரமில்லை
காதலிக்காய் அலைய நேரமுண்டு
தனிமையில் தொலைய நேரமுண்டு
எல்லோரையும் இகழ நேரமுண்டு
சேர்ந்து சிரித்திட நேரமில்லை