தமிழினம்

உயிரணுக்கள் இணைந்ததினால்
உண்டானதல்ல - நாங்கள்
உயிராய் நினைத்த தமிழ்
உருவாக்கிய தமிழினம்!...

இவளில் இல்லாத சொற்கள்
எங்குமில்லை
எம்மில் இல்லாத திறமை - பாரில்
எவனுக்குமில்லை

களிறில் ஏறி
கடலை ஆண்டோம்
கானகம் கடந்து
இமயம் வென்றோம் - இன்று
ஈன இலங்கையில் தோற்றதும் நாமோ?
நம்மில் ஒன்றுபடாததின் விளைவு தானோ?

அன்று காளைகள் அடக்கி
காதலில் வென்றோம்
இன்று காணொலி மூலமே
திருமணம் செய்தோம்
என்றும் மாறாதிருப்பவள்
தமிழ் மட்டும்!...

அவளிருக்கும் மட்டும்
மண்ணில் வாழ்வோம்!...
ஒன்றுபட்டு நின்று
விண்ணையும் ஆள்வோம்!...

இவன்
செல்வா பாரதி
20 சனவரி 2014

எழுதியவர் : செல்வா பாரதி (20-Jan-14, 3:00 pm)
பார்வை : 69

மேலே