காதல் காத்திருப்பு

காதல்:
அன்பே இரவு விடிய மறுக்கிறது
நிலா கொண்ட காதலால்,

சூரியன் மறைய மறுக்கிறது உயிரே
பூமி கொண்ட காதலால்,

மேகம் கலைய மறுக்கிறது கனியே
வானம் கொண்ட காதலால்,

நான் விலக மறுக்கிறேன் என் துணையே
உன்மீது கொண்ட காதலால்,

நான் கொண்ட காதலை என் உயிரே
எப்போது உணரபோகிறாய்,

கனவுகளும் வதைக்கிறது நினைவுகளும்
சுடுகிறது அன்பே நீ இல்லாததால்,

அன்பே நீ என் பார்வையின் வழி புகுந்து
என் இதயத்தில் நுழைந்து என் உயிராகிவிட்டாய ,

நீ இல்லாமல் என் வாழ்க்கை சாத்தியமற்ற ஒன்று
இருந்தால் உன்னோடு மணமேடையில் இல்லையென்றால் பிண மேடையில்தான்,

காத்திருப்பேன் காலம் கடந்தாலும் கல்லறையில்
உனக்காக நான் என்றுமே,.......உன் அன்புக்கு இணையற்ற
ஏதும் இவ்வுலகத்தில் இல்லை என் உயிரே ...!!!

-என்றும் உன் அன்புக்காய் எங்கும் உன்னவன்
(♡♡)

எழுதியவர் : பார்த்தீபன் (21-Jan-14, 11:19 am)
பார்வை : 386

மேலே