முட்டாள் மாணவன்

அன்று தான் விடுமுறைக்கு பிறகு முதல் நாள் கல்லூரியில்....
பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மாணவர்கள் அனைவரும் வணக்கம் கூறி, இருக்கைகளில் அமர்ந்து கவனிக்க தொடங்கினர்...

பேராசிரியர் : இந்த வகுப்பில் யாரேனும் தன்னை முட்டாள் என்று நினைத்தது உண்டா...? ஆம் என்றால் எழுந்து நிற்கவும்...

சிறிது நேரம் அமைதி நிலவியது....ஒரே ஒரு மாணவன் எழுந்தான்...

பேராசிரியர் : உன்னையே நீ முட்டாள் என்று நினைக்க காரணம் என்ன?? சொல்

மாணவன் : நான் முட்டாள் இல்லை, நீங்கள் தனியாக நிற்பதை என்னால் காண இயலவில்லை....அதனால் தான் எழுந்தேன்.

மொத்த வகுப்பறை கொல்லென்று சிரிக்க.....

பேராசிரியரும் சிரித்து விட்டார்...!!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (21-Jan-14, 1:38 pm)
Tanglish : muttal maanavan
பார்வை : 293

மேலே