நானே நான்
மழலையின் குரலில்
தேடினேன்
மங்கையின் சிரிப்பில்
தேடினேன்
பறவையின் கானத்தில்
தேடினேன்
பாரெல்லாம் பறந்து பறந்து
தேடினேன்
எங்கு தேடியும்
கிடைக்காத நீ
நான் சலனமற்று மெளனமாக
இருந்த போது
"நான் உன்னுள்ளே இருக்கிறேன்" என்று
குரல் கொடுத்த போதுதான்
நான் உன்னுள்ளே அடக்கமாகி உள்ளதை
உணர்ந்தேன்.
நானும் நானானேன்.