தூக்கம்
நாளைய கேள்விகளும்
வாட்ட...
மூடமறுக்கும் இமைகளும்
மூர்க்கச் சிந்தனைகளும்
தொடர...
வாடிய மனமின்று மொட்டை மாடிக்குத் துரத்திற்று தூக்கம் கிடைக்குமாவென்று தேட.
வந்து படுத்ததும் காற்றின் விசிறலில் அருகிருக்கும் மரத்தினின்று குயிலின் குரலினிமையில் மூழ்கி மெல்ல...மெல்லக்
கவிழும் என் இமைகள்.
இன்னும் அந்த தூங்குமூஞ்சி மரத்தின் கிளையில்
தூங்காத குயில்....