வாழ்க்கை போராட்டம்
காலம் கற்றுத் தந்த பாடங்களும் சுகம் தான்
கடுந்துயருக்குப் பின்....
மணங்கமழும் மண் வாசனையும் சுகம் தான்
புயல் மழைக்குப் பின்....
சேயின் முகம் பார்ப்பது தாய்க்கு சுகம் தான்
பத்து மாத தவத்திற்கு பின்....
பரிகாசங்களும் அவமானங்களும் சுகம் தான்
அது வேரூன்றிய வெற்றிக்குப் பின்....
ஆம் நாம் எதிர்நோக்கும் சந்தோசங்கள் அனைத்தும்
பெரும் போராட்டங்களுக்கு பின்பு தான்,
போராடுவோம்!!!!!