அன்பெங்கே
அன்பெங்கே ...!!
மழையின் சாரலும் ...! நிழலின் குளுமையும் ...!
மழலையின் சொல்லும் ...! மங்கையின் நகைப்பும் ...!
காற்றின் இசையும் ...! மானுட நட்பும் ...!
மகிழ்வாய் மலர்ந்த உலகில் ...!
இன்றோ .....!! மரணஓலங்கள் அங்கும் ...! இங்கும் ...!
பாதையின்றி பலமின்றி ...!வாழ்வின்றி வளமின்றி ...!
இறுதியின் இரங்களில் சலனமாய் சஞ்சரிக்கும் மனமே ..! மனித குணமே ...!
மறந்தாய் மனிதாபிமனமும் ...! இழந்தாய் இனிமை குணமும் ...!
ஆழ்ந்தாய் ஆணவத்தில் ...! வீழ்ந்தாய் விதையின்றி ...!
மனிதா ...! ஓ மனிதா ...!
மண்ணைத் தொடுகையில் மலர்ந்த அன்பெங்கே ...!
மறந்தாயோ ...! அல்லது மரித்தாயோ ...!
மாற்றத்தை மனம் நிறுத்தி ...!
அன்பே முதலும் முற்றமுமென்போம் ...!!! அன்புடன் அன்புசெய்வோம் ...!!!