சின்னப் பயலே நின்னு கேளடா

சின்னப் பயலே சின்னப் பயலே!
நின்னு கேளடா!—நான்
சொன்னப் பிறகு எண்ணி அதனை
மனதில் வையடா!—நீ
மனதில் வையடா!
உன்னை நீயும் உயரம் பார்த்தும்
அளந்து பார்க்கணும்.—அதற்கு
உன்னை வளர்க்க ஒப்பிடும் பிறரை
உறவு தேடணும்.—உன்
தோளும் தோளும் உரசும் தோழமை
உனக்கும் கூடனும்—நீ .
நாளும் மேலும் வாழும் வாழ்வை
நாடி ஓடனும்.
உயரம் பார்த்தும் உன்னை நீயும்
உயர்த்திக் கொள்ளடா.- உன்னில்
உயர்ந்த மனிதரை மதித்து நீயும்
உறவு செய்யடா.—உன்னை
ஒப்பும் உயரமும் செப்பும் தரமும்
உயர்த்தும் தானடா—இதை
உணர்ந்து நீயும் உன்னை வளர்த்து
உயர வேணுண்டா!
வாழ்ந்தும் நீயும் பாரடா புரியும்
வாய்ப்பும் வசதியும்—உன்னை
அளந்தால் தானது உனக்கும் தெரியும்
வாழ்வும் தாழ்வும்—முன்னை
உயர்ந்தவன் உன்னை வென்றான் என்பான்.
அவனை உயர்ந்தால்--உன்னை
அவனே தன்னை வென்றாய் என்பான்.
விளங்கிக் கொள்ளடா!
கொ.பெ.பி.அய்யா.`