அப்பா

எப்படி எப்படியோ தன்பாசம்
உணர்த்துவாள் அம்மா.
ஓரே ஒரு
கை அழுத்தத்தில்
அனைத்தையும்
உணர வைப்பார்
அப்பா.

எத்தனையோ முறை
அம்மா திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே உறைக்கும்
என்றேனும் அப்பா
முகம் வாடும்போது!!

கேட்ட உடன் கொடுப்பதற்கு
தன் சார்பாய் அனுப்பினானோ
அப்பாவை, கடவுள்.

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
என்றாலும்
அப்பாவைப் போல்
யார் ஆகக் கூடும்...

அடித்ததில்லை
முறைத்ததில்லை
ஒரு நாளும்
திட்டியதில்லை
இல்லை என்று
சொன்னதுமில்லை
வேண்டாம் என்று
தடுத்ததுமில்லை
இருந்தும் ஏனோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு..

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
ஆனாலும் இறுகி இருந்தது
இருவரின் நட்பு..

கடைசி வரை சொல்லாமலே
சென்றுவிட்டார்..
முதுகை மெதுவாக தடவியே
பாசத்தை உணர்த்திய
உன்னத மனிதர்!
அப்பா...

எழுதியவர் : நவீன் - முரளி (22-Jan-14, 9:15 pm)
Tanglish : appa
பார்வை : 314

மேலே