எம்ஆர்ராதாவின் கேலிலள்விக்கு பதிலடி தந்த வாரியார் சுவாமிகள்

எம்.ஆர்.ராதாவின் கேலி(லள்வி)க்கு பதிலடி தந்த வாரியார் சுவாமிகள்.

ஒரு முருகனடியார் இல்ல திருமணத்திற்கு வாரியார்சுவாமிகளை அழைத்திருந்தார்கள்.சுவாமிகளும் அங்கு சென்றார் திருமணஇல்லதாருக்கு திரு.எம்.ஆர்.ராதா வேண்டியவர் போலும் அவரும் வந்திருந்தார்.
மாப்பிள்ளையின் தந்தை திரு.எம்.ஆர்.ராதாவை மணமக்களை வாழ்த்திபேச அழைத்தார். வாழ்த்தியபின் குதர்கமேவடிவான தி.க.தொண்டரான திரு.எம்.ஆர்.ராதா ஒரு கேள்வி கேட்டார்."தூக்கத்துல நாம பொரண்டு படுக்கறோம்.ஆனா முருகருக்கு ஆறுதலைன்னு சொல்றாங்க.அவர் எப்படி புரண்டு தூங்குவார்?" என்று அனர்த்தமாக கேட்டார்.
உடனே வள்ளல் வாரியார் சுவாமி திருமணப்பெண்ணின் தந்தையை அழைத்தார்."அப்பா நீ நேத்தைக்கு இரவு நன்றாக தூங்கினாய?" என்று கேட்டார்.
மணப்பெண்ணின் தந்தை பணிவுடன்,"எப்படி சுவாமி மகளின் திருமணத்தை மறுநாள் வைத்துக்கொண்டு எப்படி தூங்குவது? கொஞ்சம்கூட உறக்கமில்லை." என்று சொன்னார்.
சுவாமி அனைவரையும் நோக்கி ,"ஒரு குழந்தையை வாழ்கையில் கரைசேர்க்க பாடுபடும் தந்தையே துங்கமுடியவில்லை என்றால்,என் அப்பன் முருகன் உலகிலுள்ள அணைத்து ஜீவராசிகளுக்கும் தந்தை.அனைவரையும் கரை கரைசேர்க்கும் அவன் தூங்க சமயம் எது? அவன் தூங்காமல் அணைத்து உலகங்களையும் சீராக இயக்குவதால்தான் நாம் அனைவரும் நன்றாக தூங்க முடிகிறது" என்று அருள்மொழிந்தார்.

எழுதியவர் : முரளிதரன் (23-Jan-14, 12:05 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 92

மேலே