உன்னை கண்டவுடன்

என் கண்களுக்குள்
அடக்கிவிட்டேன் உலகத்தை ..
உன் உருவில் !
என்னை ரசிக்கும்
என் வீட்டுக்கண்ணாடிக்கு
விடை தந்துவிட்டேன் ..
உன் விழிகளில்
என்னை காண்பதால் !
அனைத்தையும் நேசிக்கிறேன் ,
யாவும் உன் பிம்பத்தையே
உள்ளடக்கி இருப்பதாய்த்
எனக்குத் தோன்றியதால் !
இமை விரிக்க
மனமில்லை ..
இதழ் திறக்க
வழியின்றித் தவிக்கிறேன் ..
உன் பார்வையில்
விழுந்த நாள்முதலாய் !